Posts

Showing posts from February, 2016

Learnt from Nokia's loss

The advantage you have yesterday, will be replaced by the trends of tomorrow. You don’t have to do anything wrong, as long as your competitors catch the wave and do it RIGHT, you can lose out and fail.To change and improve yourself is giving yourself a second chance. To be forced by others to change, is like being discarded.Those who refuse to learn & improve, will definitely one day become redundant & not relevant to the industry. They will learn the lesson in a hard & expensive way.

ATG BCC - Increase number of character in List (String) property

In default, ATG BCC allows 254 characters for list (string). To increase this limit follow the steps

#1. [ATG BCC - DYN/ADMIN] /nucleus/atg/web/viewmapping/ViewMappingRepository/
#2. Run the following query
<add-itemitem-descriptor="propertyViewAttributeDefinition"id="AmPvadPrimListValueMaxChars"><set-propertyname="description"><![CDATA[Max number of input characters for a value field]]></set-property><set-propertyname="defaultValue"><![CDATA[500]]></set-property></add-item>

Now ATG BCC will allow 500 characters in list properties


Source: http://yagnaum.com/blog/?p=2023

சமயம் வரும் போது சொல்கிறேன்!

குரு ஒருவர் தனது சீடர்களுக்கு பாடம் நடத்தினார். 
"எந்த ஒரு செயலும் வெற்றி 
பெற வேண்டுமானால்,செயலில் மட்டுமே கவனம் இருக்க வேண்டுமே தவிர,
அதன் பலனில் 
இருக்கக் கூடாது .!"
என்ற கீதையின் வாசகத்தை விளக்கிக் கொண்டிருந்தார்.
அப்போது ஒரு சீடன்
எழுந்து,"அது எப்படி ?
செயலில் அக்கறை
என்பதே அதன் பலனை எண்ணித் தானே, பிறகு எப்படி அதைத் தவிர்ப்பது.?" எனக் கேட்க,
" சமயம் வரும் போது சொல்கிறேன்!" என்றார் குரு.
ஒரு முறை உபன்யாசம் முடிந்து திரும்பும் வழியில்,மாமரம் ஒன்றில் பெரிய கனியொன்றைக் கண்ட சீடன்,அதைச் சுவைக்க விரும்பி,கல் எடுத்து வீசினான்.
பல முறை முயன்றும் குறி தவறியதால் பலனில்லை.
அதைக் கண்ட குரு,தானே ஒரு கல்லை எடுத்து வீச ,ஒரே
வீச்சில் கனி விழுந்தது.
ஆச்சரியமடைந்த சீடன்,
"எப்படி சுவாமி இது.?"என்றான்.
"வீழ்த்த வேண்டும் என்ற குறிக்கோளோடு ,அதைச் சுவைக்கும் போது எப்படி இருக்கும் என்று பலனையும் நினைத்தபடியே,கல்லை வீசினாய்.
வீழ்த்த வேண்டும் என்பது
மட்டுமே ,என் குறிக்கோளாக இருந்தது.அதனால் என்னால் எளிதாகச் செய்ய முடிந்தது.
நீ அன்று கேட்ட கேள்விக்கும் இது தான் பதில்.!" என்றார்…

துண்டு மாற்றிப் போட்ட காமராஜர்...

காமராஜர் ஒரு நாள் தன் தோளில் வலது பக்கத்தில் துண்டு போடுவதற்கு பதில் இடது பக்கத்தில் போட்டு இருந்தார்.
உடனே பத்திரிகையாளர்கள் துண்டு மாற்றி போட்டுள்ளீர்கள். எதுவும் விஷேசமா? என்று கேட்டனர்.
காமராஜர் ஒன்றும் இல்லை. சும்மாதான் போட்டுள்ளேன் என்று சொன்னார்.
பத்திரிகையாளர்கள் விடவில்லை .துண்டு மாற்றி போட்டதற்கு காரணம் என்ன என்று துளைக்க ஆரம்பித்து விட்டனர் .
உடனே காமராஜர் ஒண்ணும் இல்லைய்யா.,இடது பக்கம் சட்டை லேசா கிழிந்துள்ளது.அதை மறைக்கத்தான் இடது பக்கம் துண்டை மாற்றிப் போட்டுள்ளேன். வேணும்ன்னா பாருங்கள் என்று துண்டை விட்டு, எடுத்து கிழிந்த சட்டையை காண்பித்தாராம்.
இவர் தான் உண்மையான மக்கள் தொண்டர்...
இன்றைய அரசியல்வாதிகள் பச்சை குத்துவதிலும்.. பால் காவடி தூக்குவதிலும்... ஸ்டிக்கர் ஓட்டுவதிலும்... குடும்பத்துடன் ஊழல் செய்வதிலும் பிசியாக உள்ளனர்...

சுஜாதா நினைவு தினம்...

“பெண்களுக்கு ஏற்ற உடை என்று எதைச் சொல்வீர்கள்?” இப்படி ஒரு கேள்வியை நம்மிடம் கேட்டால் ,
நாம் ஒவ்வொருவரும் ...புடவை...சுடிதார்...ஜீன்ஸ்...இப்படி ஏதாவது ஒரு பதிலைச் சொல்வோம் ..! ஆனால் , ஒரே ஒருவர் மட்டும் , நாம் கொஞ்சமும் எதிர்பார்க்காத ஒரு வித்தியாசமான கேள்வியை பதிலாகத் தந்தார் ...! # “பெண்களுக்கு ஏற்ற உடை என்று எதைச் சொல்வீர்கள்?” பதில் : “எந்த நேரத்தில் என்பதைச் சொல்லுங்கள்!” # அசத்தல் என்று தோன்றுகிறதா..?
..... அதுதான் சுஜாதா....! இதோ... சுஜாதாவின்
இன்னும் சில சுவாரஸ்ய கேள்வி – பதில்கள் : # கேள்வி : “வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்களே, வாய்ப்புகள் நல்ல வாய்ப்புகள் என்று எப்படித் தெரியும்?” சுஜாதா : “நழுவிப் போனதும் தெரிந்து விடும்!” # கேள்வி : “பிரிட்னி ஸ்பியர்ஸ், ஜென்னிஃபர் லோபஸ் கேட்பதுண்டா ?” சுஜாதா : “அவர்கள் கேட்பதற்கல்ல, பார்ப்பதற்கு.” # பிப்ரவரி 27 : சுஜாதா நினைவு தினம்...!
John Durai Asir Chelliah

The great gift from my girl

Image